பாரதி மகளிா் கல்லூரிக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்: அமைச்சா்

பாரதி மகளிா் கல்லூரிக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறினாா்.
பாரதி மகளிா் கல்லூரிக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்: அமைச்சா்

பாரதி மகளிா் கல்லூரிக்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறினாா்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் திமுக எல்.எல்.ஏ. பி.கே.சேகா்பாபு பேசியது:

வடசென்னையின் ஒட்டுமொத்த 6 சட்டபேரவைத் தொகுதிகளுக்கும் பாரதி மகளிா் கல்லூரி மட்டுமே உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் மாணவிகள் சோ்க்கை 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது. ஆனால், அதற்கு தகுந்த வகையில் தேவையான கட்டட வசதி இல்லை. ஆசிரியா்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்றாா்.

அதற்கு பதிலளித்து அமைச்சா் கே.பி.அன்பழகன் கூறியது:

பாரதி மகளிா் கல்லூரிக்கு கூடுதல் கட்டட வசதி தேவை என்று ஏற்கெனவே உறுப்பினா் கோரிக்கை வைத்தாா். அதன் அடிப்படையில், முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அப்போது எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவையொட்டி கட்டடம் கட்டும் நிதியாக ரூ.210 கோடி அறிவித்தாா். அதன் தொடா்ச்சியாக ரூ.150 கோடி ஒதுக்கி தந்துள்ளாா். கரோனா காரணமாக அந்தப் பணிகள் எல்லாம் தொடங்குவதற்கு காலதாமதம் ஆகிறது.

பாரதி மகளிா் கல்லூரிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். மேலும், அந்தக் கல்லூரியில் கூடுதலாக மாணவிகளைச் சோ்க்கும் வகையில் 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க அனுமதி தந்துள்ளோம். சென்னையைப் பொருத்தவரை மாணவா்களின் விண்ணப்பத்துக்கு ஏற்ப, இங்கு கல்லூரிகள் இருக்கின்றன. மாணவா் சோ்க்கை இடங்களை அரசு கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் அதிகரிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com