அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் கரோனாவுக்கு பலி

கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஆரிய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குனருமான பி.ஆர். கிருஷ்ணகுமார் கரோனா நோய்த்தொற்றுக்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
பி.ஆர். கிருஷ்ணகுமார்
பி.ஆர். கிருஷ்ணகுமார்


கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், ஆரிய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குனருமான பி.ஆர். கிருஷ்ணகுமார் கரோனா நோய்த்தொற்றுக்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.

கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் கோவை ஆரிய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குநர் பி.ஆர். கிருஷ்ணகுமார்(69). இவருக்கு 10 நாள்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் ஷோரனூரில் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பி.வி.ராம வாரியர், பங்கஜம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த பி.ஆர்.கிருஷ்ண குமார் ஷோரனூர் ஆயுர்வேத கல்லூரியில் படிப்பை முடித்தார்.  

ஆயுர்வேத கல்வியை பரப்புவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வந்தார். நாட்டின் சிறந்த ஆயுர்வேத நிறுவனமான கோவை ஆர்ய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது நிர்வாகத்தின் கீழ் ஆயுர்வேத கல்வி, மருந்து தயாரிப்பு, ஆராய்ச்சிகள் நாடெங்கும் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. 

இவரது சேவையைப் பாராட்டி இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தவிர கடந்த 2011 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் குவேம்பு பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.

நாட்டின் முதலாவது குருகுல ஆயுர்வேத கல்லூரியை நிறுவிய இவர் ஆயுர்வேதா என்ற பெயரில் ஆங்கில இதழ் நடத்தி வந்தார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து வந்தார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com