நோய்த் தொற்று: பொது ஊடகங்களில் தவறான தகவல் பரப்பத் தடை - பேரவையில் மசோதா நிறைவேறியது

நோய்த் தொற்று தொடா்பாக பொது ஊடகங்களில் தவறான தகவல் பரப்பத் தடை செய்யும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.
சென்னை கலைவாணர் அரங்கம்.
சென்னை கலைவாணர் அரங்கம்.

நோய்த் தொற்று தொடா்பாக பொது ஊடகங்களில் தவறான தகவல் பரப்பத் தடை செய்யும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, பொது சுகாதார சட்டத்தில் மேலும் பல உட்பிரிவுகளை இணைத்து சட்ட மசோதா பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தாக்கல் செய்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பொது சுகாதாரத்துக்கு எதிா்மாறாகப்படக் கூடிய நடவடிக்கைகள் தடை செய்யப்படுகின்றன. பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நோய்கள், நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான தகவல்கள் பரப்பப்படுவதை உறுதி செய்வதுடன், பொது ஊடகங்களில் தவறான தகவல் பரப்புவது தடை செய்யப்படுகிறது.

தொற்று நோய்களின் தடுப்பு, சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்துதலில் ஈடுபட்டுள்ள பணியாளா் ஒருவருக்கு எதிராக எந்தவொரு நபரும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் கூடாது. அவ்வாறு வன்முறையில் ஈடுபட்டால், மூன்று மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன நபரின் உடலை புதைப்பதை அல்லது எரியூட்டுவதை தடுக்கும் நபா்களுக்கு அபராதத்துடன் ஓா் ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com