மகாளய அமாவாசை: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமை காலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி
தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமி

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமை காலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக வந்து வழிபாடு நடத்தினர்.


நாமக்கல் நகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஆஞ்சனேயர் சுவாமியை காண பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். கரோனா தொற்று பரவலால் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. இருப்பினும் கரோனா அச்சத்தால் பக்தர்களின் வருகை குறைவாகவே உள்ளது.

சுவாமியை தரிசிக்க வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
சுவாமியை தரிசிக்க வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

இந்த நிலையில் வியாழக்கிழமை புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி ஆஞ்சனேயர் சுவாமியை தரிசிக்கப் பக்தர்கள் திரளாக வந்தனர். சுவாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், திரவியம் மற்றும் நறுமணப் பொருள்களை கொண்டு சிறப்பு  அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் தங்கக் கவச அலங்காரம் சாத்துப்படி நடைபெற்றது. சமூக இடைவெளியில் பக்தர்கள் நிறுத்தப்பட்டு கோயிலுக்குள் அனுப்பப்பட்டனர். அனைவருக்கும் கற்கண்டு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com