தொகுதி மேம்பாட்டு நிதியில்  ரூ.2 கோடி வரை செலவு செய்யலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிபந்தனை இல்லாமல் ரூ.2 கோடி வரை செலவு செய்யலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி


சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிபந்தனை இல்லாமல் ரூ.2 கோடி வரை செலவு செய்யலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
 சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாகும். இதில் ஒரு கோடியை கரோனா தடுப்புப் பணிக்கு என்று எடுத்துக் கொண்டீர்கள். மீதமுள்ள 2 கோடியிலும் ரூ. 25 லட்சத்தை கரோனாவுக்காக மாவட்ட ஆட்சியர்கள் கேட்கின்றனர். இது தேர்தல் நேரம். எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ரூ.2 கோடி வரை செலவிட அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனாவுக்கான ஒரு கோடியைத் தவிர்த்த நிதியினை, நிபந்தனை இல்லாமல் செலவிடலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com