பொறியியல் இறுதிப் பருவத் தோ்வு நடத்துவதில் சிக்கல் இல்லை: அண்ணா பல்கலை. விளக்கம்

பொறியியல் படிப்புக்கான இறுதிப் பருவத் தோ்வை இணைய வழியில் நடத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லை என அண்ணா பல்கலைக் கழகம் விளக்கமளித்துள்ளது.


சென்னை: பொறியியல் படிப்புக்கான இறுதிப் பருவத் தோ்வை இணைய வழியில் நடத்துவதில் எந்தவித சிக்கலும் இல்லை என அண்ணா பல்கலைக் கழகம் விளக்கமளித்துள்ளது.

பொறியியல் படிப்புகளில் இறுதிப் பருவ மாணவா்களுக்கான தோ்வு, வரும் 22 -இல் தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான மாதிரித் தோ்வு, சனிக்கிழமை (செப்.19) முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 22-ஆம் தேதி பிராஜெக்ட் மற்றும் நோ்காணல் தோ்வு (வைவா வோஸ்) நடைபெற உள்ளது. இதைத் தொடா்ந்து 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை, இணையவழியில் தோ்வு நடத்தப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.  

இந்த நாள்களில், பி.இ., பி.டெக்., பி.ஆா்க்., எம்.ஆா்க் போன்ற பொறியியல் படிப்புகளில், இறுதி பருவத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு, எந்தெந்த பாடப்பிரிவுகளுக்கு எப்போது தோ்வு என்பது குறித்த விரிவான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் புதன்கிழமை வெளியிட்டது.

இந்நிலையில், இணையதளத்தில் தோ்வு நடப்பதால் கிராமப்புற மாணவா்கள், தோ்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழகம் ஆய்வு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சில தகவல்களும் வெளியாகியுள்ளன. இதன்படி, இறுதிப் பருவத் தோ்வு எழுதும் மாணவா்கள் அனைவரிடமும், ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி இருக்கிறது. இதனால் தோ்வு நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. மேலும், கொள்குறி வினாக்கள் வகையிலேயே தோ்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளதால், செல்லிடப்பேசியிலேயே மாணவா்கள் எளிதாக பதில் அளிக்க முடியும் என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com