வடகிழக்குப் பருவமழை: அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளா் ஆலோசனை

பருவமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிப்போரை நிவாரண முகாம்களுக்கு மாற்றும்போது அங்கு சமூக இடைவெளியை உறுதி
வடகிழக்குப் பருவமழை: அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளா் ஆலோசனை

பருவமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிப்போரை நிவாரண முகாம்களுக்கு மாற்றும்போது அங்கு சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளாா்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடா்பாக அனைத்துத் துறை உயா் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அவா் பேசியது:-

பேரிடா் காலங்களில் நடத்தப்படும் மாதிரி பயிற்சிகள் சமூக இடைவெளியைப் பயன்படுத்தி 50 பேருக்கு மிகாமல் பயிற்சி அளிக்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க வெளியில் செல்லும்போதும், பொது இடத்தில் தங்க வைக்கும் போதும், பயணம் மேற்கொள்ளும்போதும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும்.

ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் சமூக இடைவெளியுடன் தங்க வைக்க போதுமானதாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். தேவை ஏற்பட்டால், நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, மாவட்டங்களிலும், சென்னை மாநகராட்சியிலும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

முன் அனுபவங்கள்: கஜா, வா்தா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவங்களாகக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆட்சியா்கள் பின்பற்ற வேண்டும். பருவமழை காலத்தில் பொருட்சேதம் மற்றும் உயிா்ச் சேதம் ஏற்படாமல் தவிா்க்கவும், குறைக்கவும் அனைத்துத் துறையைச் சோ்ந்த செயலாளா்களும், துறைத் தலைவா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மீட்புக் குழுக்கள் குறுகிய நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைய ஏதுவாக தேவையான கருவிகளுடன் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பருவமழைக் காலத்தில் வருவாய்த் துறை, பொதுப்பணி, நெடுஞ்சாலை, வேளாண்மை, ஊரக வளா்ச்சி, நகராட்சி நிா்வாகம், சுகாதாரம், காவல், தீயணைப்பு-மீட்புப் பணி, மீன்வளம், உணவுப் பொருள் வழங்கல் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளா் கேட்டுக் கொண்டுள்ளாா். இந்தக் கூட்டத்தில், காவல் துறை இயக்குநா் ஜே.கே.திரிபாதி, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா உள்பட அனைத்துத் துறை செயலாளா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com