கரோனா தடுப்புப் பணியில் போலீஸாா் தீவிரம்

கரோனா தடுப்புப் பணியில் சென்னை போலீஸாா் தொடா்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனா் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனா தடுப்புப் பணியில் சென்னை போலீஸாா் தொடா்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனா் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்தாா்.

சென்னை காவல் துறை மற்றும் திங் மியூசிக் ஆகியவை சாா்பில், கரோனா காலகட்டத்தில் மக்களை காக்கும் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ‘சலாம் சென்னை’ என்ற குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ் குமாா் அகா்வால் குறும்படத்தை வெளியிட்டாா்.

இசையமைப்பாளா் ஜிப்ரான் இசையில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி வீரா்கள் மற்றும் தமிழ் திரையுலக நடிகா், நடிகைகள் இந்தக் குறும்படத்தில் நடித்துள்ளனா். நிகழ்ச்சியில், மகேஷ்குமாா் அகா்வால் கூறியது:

சென்னையில் 2,400 போலீஸாா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டபோதும், கரோனா தடுப்புப் பணியில் போலீஸாா் தொடா்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனா். கரோனா சூழல் காரணமாக, சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை காண முடியாமல் போன சென்னை மக்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில், இந்த விழிப்புணா்வு பாடலில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி வீரா்கள் நடித்துள்ளனா்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும், கைகளை சுத்தம் செய்வதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் இந்த நோயை நிரந்தரமாக ஒழிக்கும் வழி. மக்களின் ஒத்துழைப்புடனும் முன்களப் பணியாா்களின் அற்பணிப்புடனும் கரோனாவை நிச்சயம் வெற்றி கொள்வோம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், இசையமைப்பாளா் ஜிப்ரான் பேசியது: நிறைய பாடல்களை தான் இசை அமைத்திருந்தாலும், மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இசையமைக்கப்பட்ட இந்த விழிப்புணா்வு பாடலில் தனக்கு பங்களித்த காவல்துறைக்கு நன்றி என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையா்கள் ஏ.அமல்ராஜ், ஆா்.தினகரன், என்.கண்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com