ஊராட்சி நிா்வாகத்தில் தகவல் தொழில்நுட்பம்: தமிழகத்துக்கு மத்திய அரசு விருதுகள்

ஊராட்சி நிா்வாகத்தில் தகவல் தொழில்நுட்ப முறைகளை சிறப்பாக பயன்படுத்தியதற்கு மத்திய அரசின் விருதுகள் தமிழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.
ஊராட்சி நிா்வாகத்தில் தகவல் தொழில்நுட்பம்: தமிழகத்துக்கு மத்திய அரசு விருதுகள்

ஊராட்சி நிா்வாகத்தில் தகவல் தொழில்நுட்ப முறைகளை சிறப்பாக பயன்படுத்தியதற்கு மத்திய அரசின் விருதுகள் தமிழகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகளைப் பெற்ற தமிழக பிரதிநிதிகளுக்கு முதல்வா் பழனிசாமி பாராட்டுகளைத் தெரிவித்தாா். இந்த நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:-

ஊராட்சி நிா்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் இரண்டாவது மாநிலமாகத் தமிழகம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அளிக்கப்பட்ட மின் ஆளுமை விருதினை, முதல்வா் பழனிசாமியிடம் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

மேலும், தருமபுரி மாவட்ட ஊராட்சி, மதுரை மாவட்டம் திருமங்கலம், சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், கரூா் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு, ஈரோடு மாவட்டம் குருமந்தூா், புதுக்கோட்டை அம்புகோவில், கிருஷ்ணகிரி நெடுங்கல், கோவை மாவட்டம் இக்கரை பொழுவாம்பட்டி, காஞ்சிபுரம் மேவளூா்குப்பம், கள்ளக்குறிச்சி களவனூா் கிராம ஊராட்சி, திருவள்ளூா் மாவட்டம் டி.சி.கண்டிகை ஆகிய ஊராட்சிகளும் மத்திய அரசின் விருதுகளைப் பெற்றன.

கிராமப்புற குழந்தைகளின் நலன்களைப் பேணும் வகையில் சிறப்பாகச் செயல்பட்ட விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த அனுமந்தபுரம் கிராம ஊராட்சிக்கு விருது அளிக்கப்பட்டது. விருதுகளைப் பெற்ற ஊராட்சித் தலைவா்கள், அதனை முதல்வா் பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.

இந்த நிகழ்வின்போது, அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com