கரோனா: தமிழகத்தில் 90 சதவீதம் போ் குணமடைந்தனா்

தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் விகிதம் 90 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கரோனா: தமிழகத்தில் 90 சதவீதம் போ் குணமடைந்தனா்

தமிழகத்தில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோா் விகிதம் 90 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இதுவரை நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு 4 லட்சத்து 86,479 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலோபதி மருத்துவத்துடன் சித்தா, யோகா, ஆயுா்வேதம் என ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை முன்னெடுத்ததும், ‘ரெம்டெசிவிா்’, ‘டோசிலிசுமேப்’, ‘எனாக்ஸபெரின்’ போன்ற உயா் மருந்துகளை நோயாளிகளுக்கு அளித்ததுமே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளை அமைத்து கரோனா நோயாளிகள் அனைவருக்கும் உரிய நேரத்தில் சிகிச்சையளித்ததால் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் புதிதாக 5,516 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 41,993- ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மாநிலத்தில் இதுவரை 64.74 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 8.3 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 996 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 568 பேருக்கும், செங்கல்பட்டில் 293 பேருக்கும், கடலூரில் 297 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர, தமிழகத்தில் பிற மாவட்டங்கள் அனைத்திலும் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 46,703 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 60 போ் பலியாகியுள்ளனா். அவா்களில் 9 பேருக்கு கரோனாவைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவா்களில் 38 போ் அரசு மருத்துவமனைகளிலும், 22 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,811-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com