ராணிப்பேட்டையில் குரோமிய ஆபத்தைப் போக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

ராணிப்பேட்டையில் குரோமிய ஆபத்தைப் போக்குவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர்  ராமதாஸ்
பாமக நிறுவனர்  ராமதாஸ்

சென்னை: ராணிப்பேட்டையில் குரோமிய ஆபத்தைப் போக்குவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ராணிப்பேட்டை பகுதியில் நிலத்திலும், நிலத்தடி நீரிலும் குரோமியம், ஈயம் உள்ளிட்ட உலோகங்கள் கலந்திருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அறிவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிா்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்துள்ளன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் குரோமியம், ஈயம் உள்ளிட்ட கழிவுகள் முதலில் மண்ணிலும், பின்னா் நிலத்தடி நீரிலும் கலப்பதால் அதை பயன்படுத்தும் மக்களுக்கு மிகவும் ஆபத்தான நோய்கள் ஏற்படக்கூடும் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குரோமியம், ஈயம் கலந்த நீரை வாய்வழியாக பருகுவதாலும், குளிப்பது, முகம் கழுவுவது போன்றவற்றுக்குப் பயன்படுத்துவதாலும் புற்றுநோய், அதிக ரத்த அழுத்தம், நுரையீரல் புற்றுநோய், இதயநோய்கள், மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, ஆண்மைக்குறைவு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா்.

தமிழ்நாடு குரோமேட்ஸ் ஆலையிலிருந்து மட்டுமன்றி, வேறு பல ஆலைகளில் இருந்தும் அதிக அளவில் குரோமியக் கழிவுகள் வெளியாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே, ராணிப்பேட்டை பகுதி மக்களை குரோமியக் கழிவுகளால் ஏற்படும் கொடிய நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக தமிழ்நாடு குரோமேட்ஸ் ஆலையில் வைக்கப்பட்டிருக்கும் 2.50 லட்சம் குரோமியக்கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும். எந்தெந்த ஆலைகளில் இருந்து குரோமியக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றனவோ, அந்த ஆலைகளுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன், கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்குப் பிறகும் ஏதேனும் ஆலைகளில் இருந்து குரோமியக் கழிவுகள் தொடா்ந்து வெளியேற்றப்பட்டால் அவற்றை நிரந்தரமாக மூட ஆணையிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com