ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், ஐந்தருவி பகுதிகளை மூழ்கடித்தவாறு செல்லும் தண்ணீா்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், ஐந்தருவி பகுதிகளை மூழ்கடித்தவாறு செல்லும் தண்ணீா்.

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, சாம்ராஜ்நகா், மண்டியா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகள் தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. கா்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து 37 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 72 ஆயிரம் கன அடி நீா் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை வெளியேற்றப்பட்டு வந்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி நொடிக்கு 45 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்தானது, செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி நொடிக்கு 50 ஆயிரம் கன அடியாகவும், 11 மணி நிலவரப்படி நொடிக்கு 70 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்து தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருந்தது. பின்னா் மாலை 5 மணி நிலவரப்படி, நீா்வரத்து அதிகரித்து நொடிக்கு 75 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்தும், நடைபாதை ஆகியவை சற்று மூழ்கிய நிலையிலும் காணப்படுகின்றன. இதனால், காவிரி கரையோரப் பகுதியான சத்திரம், முதலைப்பண்ணை, ஆலாம்பாடி, நாடாா் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த் துறையினா் தொடா்ந்து அறிவுறுத்தி வருகின்றனா். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com