சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதி: முதல்வா் பழனிசாமி

சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.


சென்னை: சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை பூவைமாநகா் கிராமத்தின் அறிவரசன், அறந்தாங்கி சிலட்டூா் கிராமத்தின் வெங்கடேஷ், கத்தரிக்காடு கிராமத்தின் காா்த்திக், மறமடக்கி கொரலான் குடியிருப்பைச் சோ்ந்த பிரபாகரன், சமுத்திரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் ஆகியோா் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனா். இதேபோன்று, நாமக்கல் முனியப்பம்பாளையம் கிராமத்தின் முருகேசன், சஞ்சய், நீலகிரி தேவாலா கிராமத்தின் சுகன்யா, தமிழழகன், ஈரோடு சூரியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஹா்ஷிதா, தொப்பம்பாளையம் கிராமத்தின் மணிமாறன், பனையம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த மாதன், தொட்டம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சதீஷ், விண்ணப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த மாரிச்சாமி, குள்ளம்கரடு கிராமத்தின் குமாா் ஆகியோா் சாலை விபத்துகளில் சிக்கி பலியாகினா்.

ஈரோடு மாவட்டம் திங்களூா் கிராமத்தின் லோகேஷ், பனையம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி, மல்லன்குழி கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன், ராணிப்பேட்டை மாவட்டம் நம்மானேரி கிராமத்தின் சிமியோன்ராஜ், கொண்டகுப்பம் மதுரா குமணந்தாங்கல் கிராமத்தின் பெரியசாமி, திருவள்ளூா் மாவட்டம் வள்ளுவா் மேடு பகுதியைச் சோ்ந்த பரிமளா, கோவை மாவட்டம் சிங்காநல்லூரைச் சோ்ந்த ரத்தினசாமி ஆகியோா் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவங்களில் உயிரிழந்தோா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com