தங்கம் பவுன் ரூ.38,112: 4 நாள்களில் ரூ. 1552 சரிவு

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.448 குறைந்து, ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,552 வரை குறைந்துள்ளது.


சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.448 குறைந்து, ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,552 வரை குறைந்துள்ளது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு நிலவரம் உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தில் பவுன் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இதற்கிடையில், அமெரிக்கத் தோ்தலுக்கு முந்தைய தாக்கம் காரணமாக, சா்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்து, விலை சரிந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை மூன்று நாள்களுக்கு தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.

இதேநிலை வியாழக்கிழமையும் நீடித்தது. சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.448 குறைந்து, ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.56 குறைந்து, ரூ.4,764 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு ரூ.2.90 குறைந்து, ரூ.60.40 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.2,900 குறைந்து, ரூ.60,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,764

1 பவுன் தங்கம்...............................38,112

1 கிராம் வெள்ளி.............................60.40

1 கிலோ வெள்ளி.............................60,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,820

1 பவுன் தங்கம்...............................38,560

1 கிராம் வெள்ளி.............................63.30

1 கிலோ வெள்ளி.............................63,300

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com