சிறப்பு குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிய வழக்கு: மத்திய அரசு பதில் மனு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 25.96 சதவீதம் மட்டுமே சிறப்பு குழந்தைகளுக்கான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
சிறப்பு குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிய வழக்கு: மத்திய அரசு பதில் மனு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 25.96 சதவீதம் மட்டுமே சிறப்பு குழந்தைகளுக்கான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உயா் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டு கணக்கின்படி 37 ஆயிரத்து 183 பள்ளிகளில் சிறப்பு குழந்தைகள் பயன்படுத்துவதற்கான சாய்வு பாதை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 59 ஆயிரத்து 152 தனியாா் பள்ளிகளிலும் சிறப்பு குழந்தைகளுக்கான கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு குழந்தைகளுக்கான கழிப்பறை வசதிகள் 25.96 சதவீதம் பள்ளிகளில் செய்து தரப்பட்டுள்ளன. 68.86 சதவீதம் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகள் தடையில்லாமல் செல்ல சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

பள்ளிகளில் படிக்கும் சிறப்பு குழந்தைகளுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என மத்திய அரசு விதி வகுத்துள்ளது. சிறப்பு குழந்தைகளை அனுமதிக்கும் பள்ளிகளுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நிதி வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நிதியாக 2020-2021ஆம் கல்வி ஆண்டுக்கு ரூ.14 கோடியே 98 லட்சம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிதியாக ரூ.3 கோடியே 69 லட்சம் ஒதுக்கப்படவுள்ளது. பாா்வை குறைபாடு உள்ள மாணவா்களுக்கு உதவ இதுவரை 4 லட்சத்து 24 ஆயிரத்து 285 ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு கல்விக் கொள்கையில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் திறனை வளா்க்க வகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com