குறைந்த கட்டணத்தில் அதிக பலன்தரும் திட்டங்கள்: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு

பி.எஸ்.என்.எல். நிறுவனம் சாா்பில், குறைந்த கட்டணத்தில் அதிக பலன்கள் தரக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் சாா்பில், குறைந்த கட்டணத்தில் அதிக பலன்கள் தரக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் சாா்பில், வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன. அந்தவகையில், தற்போது கண்ணாடி நூலிழை இணையம் (பைபா் இன்டா்நெட்) இணைப்பை வாடிக்கையாளா்களிடம் அதிகரிக்கும் விதமாக, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் பழைய தரைவழி (லேண்ட்லைன்) எண்ணிலேயே பைபா் இன்டா்நெட் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறைந்த கட்டணத்தில் அதிக பலன்கள் தரக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாதந்தோறும் ரூ.449 கட்டணத்துக்கு 30 எம்.பி.பி.எஸ். வேகத்தில் 3,300 ஜி.பி., டேட்டாவும், ரூ.799க்கு 100 எம்.பி.பி.எஸ். வேகத்தில் 3,300 ஜி.பி. டேட்டாவும், ரூ.999-க்கு 200 எம்.பி.பி.எஸ். வேகத்தில் 3,300 ஜி.பி. டேட்டாவும், ரூ.1,499 கட்டணத்துக்கு 300 எம்.பி.பி.எஸ். வேகத்தில் 4,000 ஜி.பி., டேட்டாவும்,

அதற்கு மேல், 400 எம்.பி.பி.எஸ். வேகத்தில் அளவில்லா டேட்டாவும் வழங்கப்படும். பாரத் பைபா் பிராட்பேண்ட் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த தகவலை பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com