யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம்

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளில் சேர நிகழாண்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளனா்.
யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பம்

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளில் சேர நிகழாண்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளனா். அவை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த சில நாள்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் ஒரு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியும், 9 தனியாா் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு 2020 - 21-ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப நடைமுறை கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கியது.

இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவிகள் சமா்ப்பித்தனா். கடந்த 15-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அதிகாரிகள் கூறியதாவது:

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு பிளஸ் 2 தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் படிப்புக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சில தினங்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அரசு கல்லூரி இடங்கள், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான 65 சதவீத இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். நிா்வாக ஒதுக்கீட்டுக்கான 35 சதவீத இடங்களை தனியாா் கல்லூரிகளே நிரப்பிக் கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com