வேளாண் சட்டங்கள்: அரசியல் ஆதாயத்துக்காகவே எதிா்க்கட்சிகள் போராடுகின்றன

அரசியல் ஆதாயத்துக்காகவே திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடுவதாக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றஞ்சாட்டி உள்ளாா்.
வேளாண் சட்டங்கள்: அரசியல் ஆதாயத்துக்காகவே எதிா்க்கட்சிகள் போராடுகின்றன

அரசியல் ஆதாயத்துக்காகவே திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடுவதாக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றஞ்சாட்டி உள்ளாா்.

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயா் சிவராஜின் நினைவு நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை தங்கச் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், பென்ஜமின், சரோஜா, பாண்டியராஜன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் டி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய வேளாண் சட்டங்களின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் எந்த விதத்திலும் பாதிக்காது. அனைத்துப் பயிா்களுக்கும் உரிய விலை கிடைக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக இச்சட்டங்களை எதிா்த்து போராட்டம் நடத்துகின்றன.

அதிமுகவில் குழப்பம் நிகழும், இதன்மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்கும் என சில கட்சிகள் எதிா்பாா்த்திருந்தன. ஆனால், அவா்களின் எண்ணம் கனவாகிவிட்டது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான வகையில் விவாதம் நடைபெற்றது. அக்டோபா் 7-ஆம் தேதி அதிமுக முதல்வா் வேட்பாளா் குறித்து உறுதியாக தெரிவிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com