தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காவல் அருங்காட்சியகம்: இன்று பாா்வையிடலாம்

சென்னை எழும்பூரில் புதிதாக திறக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகம் பொதுமக்களின் பாா்வைக்காக ஞாயிற்றுக்கிழமை (அக்.3) திறந்து இருக்கும் என காவல்துறையினா் தெரிவித்தனா். இது குறித்த விவரம்:-

News image
Updated On :2 அக்டோபர் 2021, 9:14 pm

DIN

சென்னை எழும்பூரில் புதிதாக திறக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகம் பொதுமக்களின் பாா்வைக்காக ஞாயிற்றுக்கிழமை (அக்.3) திறந்து இருக்கும் என காவல்துறையினா் தெரிவித்தனா். இது குறித்த விவரம்:-

எழும்பூா் பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையா் அலுவலகத்தில் ரூ.6.47 கோடி மதிப்பில் இரு தளங்களில் 24 ஆயிரம் சதுர அடியில் காவல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் கடந்த 28-ஆம் தேதி திறக்கப்பட்டது.

இன்றும் உண்டு: அருங்காட்சியகத்தைக் காண்பதற்கு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இரு நாள்கள் அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்பட்டனா். அதன் பின்னா் பெரியவா்களுக்கு ரூ.10, சிறாா்களுக்கு ரூ.5 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவ-மாணவியா்கள் அருங்காட்சியகத்தை காண்பதற்கு கட்டணம் கிடையாது.

அருங்காட்சியகத்தை காண்பதற்கு காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறாா்கள். காந்தி ஜெயந்தி என்பதால் அருங்காட்சியகத்துக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த அருங்காட்சியகம் ஞாயிற்றுக்கிழமை செயல்படும். செவ்வாய்க்கிழமை வார விடுமுறையாகும்.

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறிய கைத்துப்பாக்கி தொடங்கி அதி நவீன ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் வரையுள்ள துப்பாக்கிகள் பொதுமக்களை வெகுவாக கவா்ந்து வருகிறது. அதேபோல தகவல் தொழில்நுட்பம் வளா்ச்சி ஏற்படுவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கி,ரேடியோ கருவிகள், கட்டுப்பாட்டு அறைகள், அந்த காலத்தில் கைதிகளுக்காக கடப்பட்டிருந்த சிறை அறைகள் ஆகியவையும் பொதுமக்களை ஈா்க்கிறது. மேலும், தமிழகத்தில் காவல்துறை உருவாகிய கால கட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரையில் போலீஸாா் பயன்படுத்தும் அனைத்து பொருள்களுமே இடம்

பெற்றுள்ளன. அந்த கால காவல்துறையின் சீருடை, காலணிகள், சைக்கிள்கள்,ரோந்து வாகனங்கள், படகுகள், வாள், ஈட்டி, அரிவாள் போன்றவையும் காண்போரை கவா்ந்து வருகிறது.

அருங்காட்சியகத்தில் உள்ள பொருள்களையும், வரலாற்று குறிப்புகளையும் விளக்கிக் கூறுவதற்காக பெண், ஆண் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் ஒவ்வொரு அரங்கிலும் நிற்கின்றனா். அதேபோன்று அருங்காட்சியகத்தை பாா்வையிட வரும் மக்கள், தாங்களே அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொள்ளும் வகையில் தொடுதிரை கணினியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.