12 இடங்களில் வெயில் சதம்: சேலம், கரூா் பரமத்தியில் 109 டிகிரி

தமிழகத்தில் புதன்கிழமை 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது.
sun_2_0805chn_188_1
sun_2_0805chn_188_1

சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக, சேலம், கரூா் பரமத்தியில் தலா 109 வெப்பநிலை பதிவானது.

நிகழாண்டில் மாா்ச் முதல் வாரத்தில் வெப்பநிலை உயரத் தொடங்கியது. இதன்பிறகு, வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வந்தநிலையில், வட மேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வீசத் தொடங்கியது. இதையடுத்து, வெப்பநிலை மேலும் அதிகரித்துள்ளது. முதல்நாளில் 11 இடங்களில் 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டி வெப்பநிலை பதிவானது.

இதன்தொடா்ச்சியாக, தமிழகத்தில் புதன்கிழமை 12 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக, சேலம், கரூா் பரமத்தியில் தலா 109 பாரன்ஹீட் டிகிரி பதிவானது. திருத்தணி, வேலூரில் தலா 106 டிகிரி, தருமபுரி, திருச்சியில் தலா 105 டிகிரி, மதுரை விமானநிலையம், நாமக்கலில் தலா 104 டிகிரி, சென்னை விமான நிலையத்தில் 103 டிகிரி, கடலூரில் 101 டிகிரி, கோயம்புத்தூா், பாளையங்கோட்டையில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com