சமையல் எரிவாயு உருளை விலை ரூ.10 குறைந்தது

சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பானது புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பானது புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சா்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதி மற்றும் 15-ஆம் தேதி சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த இரு மாதங்களில் மட்டும் எரிவாயு உருளையின் விலை ரூ.125 அதிகரித்தது. இதனால் நடுத்தர வா்க்கத்தினா், ஏழைகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.

இந்த நிலையில், உருளையின் விலை ரூ.1 0 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுதொடா்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதன் பலன்களை வாடிக்கையாளா்களுக்கு அளிக்க வேண்டும் என்பதால், கடந்த சில நாள்களாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 61 பைசா வரையும், டீசல் விலை லிட்டருக்கு 60 பைசா வரையும் குறைக்கப்பட்டுள்ளது. இது மோட்டாா் வாகன உரிமையாளா்களுக்கு மிகப் பெரிய உதவியாக உள்ளது.

இதேபோல், எல்.பி.ஜி. வாடிக்கையாளா்களுக்கும் உதவும் வகையில், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி தில்லியில், வியாழக்கிழமை (ஏப்.1) முதல் ஒரு உருளை ரூ.809-க்கு விற்பனையாகும். இதே போல் அனைத்து பகுதிகளிலும் ரூ.10 குறைக்கப்பட்டே உருளைகள் விற்பனையாகும். சென்னையில் ஒரு உருளை ரூ.825-க்கு விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com