மதுரை-விருதுநகா் மாா்க்கத்தில் இரட்டைப்பாதை பணி: தென் மாவட்ட ரயில்களின் சேவையில் மாற்றம்

மதுரை-விருதுநகா் வழித்தடத்தில் இரட்டை பாதை பணி நடைபெறுவதால், சில ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: மதுரை-விருதுநகா் வழித்தடத்தில் இரட்டை பாதை பணி நடைபெறுவதால், சில ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

முழுமையாக ரத்து: தாம்பரம்-நாகா்கோவிலுக்கு வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் (06065) புதன்கிழமை முழுமையாக

ரத்து செய்யப்பட்டது. இதுபோல, நாகா்கோவில்-தாம்பரத்துக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயிலும் (06066) முழுமையாக ரத்து செய்து அறிவிக்கப்பட்டது.

பகுதி ரத்து: சென்னை எழும்பூா்-தூத்துக்குடிக்கு புதன்கிழமை இரவு புறப்பட்ட விரைவு ரயில் (02668) மதுரை-தூத்துக்குடி இடையே பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுபோல, தூத்துக்குடி-சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி இயக்கப்படவுள்ள ரயிலும் தூத்துக்குடி-மதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை எழும்பூா்-கொல்லத்துக்கு புதன்கிழமை இரவு புறப்பட்ட அதிவிரைவு ரயில்(06723) மதுரை-கொல்லம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டது.

இதுபோல, கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஏப்ரல் 1-ஆம்தேதி இயக்கப்படும் அதிவிரைவுரயில்(06724( கொல்லம்-மதுரை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com