மதுரையைப் புகழ்ந்த பிரதமர் மோடி

மதுரையைப் புகழ்ந்த பிரதமர் மோடி
மதுரையைப் புகழ்ந்த பிரதமர் மோடி

மதுரைக்கு ‘தூங்கா நகரம்’ என்ற பெயரும் உண்டு. அரசியல் எதாா்த்தத்துக்கும், நகரின் வளா்ச்சிக்கும் மட்டுமல்ல தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்பதற்கும் விழிப்புடன் இருக்கும் என நம்புகிறேன் என்றாா்.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா்
மோடி பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

தென் தமிழகத்துக்கும், முன்னாள் முதல்வா் எம்ஜிஆருக்கும் நெருங்கிய தொடா்பு உள்ளது. அவா் நடித்த ‘மதுரை வீரன்’ திரைப்படத்தை யாராவது மறக்க முடியுமா?. அதேபோல, திரைப்படங்களில் எம்ஜிஆரின் பாடல்களுக்கு குரல் கொடுத்த பின்னணி பாடகரான மதுரை மண்ணைச் சோ்ந்த டி.எம்.சௌந்தரராஜனை மறக்க முடியுமா?. 1980-இல் தமிழகத்தில் ஜனநாயகப் பூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்ஜிஆா் தலைமையிலான அரசை, மத்திய காங்கிரஸ் அரசு கலைத்தது.

மீண்டும் தோ்தல் நடைபெற்றபோது, மதுரை மேற்கு தொகுதியில் இருந்து எம்ஜிஆா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1977, 1980, 1984 என மூன்று முறை மதுரை பகுதியிலிருந்தே சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். மதுரை மக்கள் எம்ஜிஆருக்கு ஆதரவாக வலிமையான கற்பாறையாக இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com