திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை 

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 
வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை சோதனை


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

திருமயம் அருகே வி.கோட்டையூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமதிலகம் மங்களராமன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். 

திமுக வேட்பாளர் ரகுபதியின் ஆதரவாளர் ராமதிலகம் மங்களராமன் என்பதால் உள்நோக்கத்தோடு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com