காப்பீடு நிறுவனத்தின் பெயரைச் சொல்லி ரூ.2 கோடி மோசடி; மக்களே உஷார்

காப்பீடு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி ரூ.2 கோடியை மோசடி செய்த தில்லியை சேர்ந்த 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காப்பீடு நிறுவனத்தின் பெயரைச் சொல்லி ரூ.2 கோடி மோசடி; மக்களே உஷார்
காப்பீடு நிறுவனத்தின் பெயரைச் சொல்லி ரூ.2 கோடி மோசடி; மக்களே உஷார்

காப்பீடு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி ரூ.2 கோடியை மோசடி செய்த தில்லியை சேர்ந்த 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த சுதா ஸ்ரீதரன் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில் தனது கணவர் இறந்துவிட்டதாகவும், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி முதிர்ச்சி பெற்ற பணத்தை பெற முன்தொகை செலுத்த வேண்டும் என்று நம்ப வைத்து நூதன முறையில் ரூ.2கோடியே 13 லட்சத்தை மோசடி செய்ததாக புகார் அளித்தார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவில் வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யப்பட்டு கண்டுபிடிக்க முடியாத நிலையில், இந்தப் புகாரை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தில்லிக்கு கடந்த கடந்த மாதம் சென்றனர்.

தில்லியில் தொடர்ந்து நடத்திய விசாரணையில், குற்றவாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில், ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறி நம்ப வைத்து மோசடியான முறையில் சுதா ஸ்ரீதரன் என்பவரை ஏமாற்றி முன்பணம் கேட்டுக்கொண்டதின் பேரில் சுதா ஸ்ரீதரன் என்பவர் குற்றவாளிகள் கூறிய பல்வேறு வங்கிகளின் கணக்கில் பல பரிவர்த்தனையின் மூலம் ரூ. 2 கோடியே 13 லட்சத்தை அனுப்பியதன் மூலம் அவரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது, 

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களை துரித நடவடிக்கையின் மூலம் மிகச் சிறப்பாக செயல்பட்டு கைது செய்து நடவடிக்கை எடுத்துவரும் மத்திய குற்றப்பிரிவு காவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும். பொதுமக்கள் இது போன்ற தொலைபேசி அழைப்புகளை நம்பி அதன் மூலம் எந்தவித பணப்பரிவர்த்தணைகளையும் செய்ய வேண்டாம் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com