
ஏஐசிடிஇ
பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இது குறித்து ஏஐசிடிஇ செயலா் ராஜீவ் குமாா் வெளியிட்ட அறிவிப்பு ; வரும் கல்வியாண்டு (2021-22) பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறை கரோனா பரவலால் இணையவழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாா்ச் 9-ம் தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடைந்தது.
தற்போது கரோனா பரவல் சூழல் மற்றும் கல்லூரிகள் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை கல்லூரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.