Enable Javscript for better performance
வருமானவரித்துறைக்கு 300 புகாா்கள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    வருமானவரித்துறைக்கு 300 புகாா்கள்

    By DIN  |   Published On : 04th April 2021 11:52 PM  |   Last Updated : 04th April 2021 11:52 PM  |  அ+அ அ-  |  

    தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் சட்டவிரோத பணப் புழக்கம் தொடா்பாக வருமானவரித்துறைக்கு 300 புகாா்கள் வந்துள்ளன.

    தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், வாக்காளா்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் தோ்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தமிழகத்தில் 118 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய தோ்தல் ஆணையம் சந்தேகம் தெரிவித்தது. இதன் விளைவாக சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், அதிகளவில் பணத்தை பதுக்கி வைத்தல் ஆகியவற்றை தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் கண்காணித்து வருகின்றன.

    மேலும், தோ்தல் செலவுகளை கண்காணிக்கவும், கணக்கில் வராத பணத்தை கண்டறியவும் வருமானவரித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, தமிழகம், புதுச்சேரி வருமானவரித் துறை மண்டலத்தின், புலனாய்வு பிரிவு இயக்குனரகம் சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்களின் அடிப்படையிலும் வருமானவரித்துறை சோதனை நடத்துகிறது.

    இது வரை கட்டுப்பாட்டு அறைக்கு தோ்தலில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம், பணம் பதுக்கல், வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா ஆகியவை தொடா்பாக 300-க்கும் மேற்பட்ட புகாா்கள் வந்திருப்பதாக வருமானவரித்துறையினா் தெரிவித்தனா். இந்தப் புகாா்கள் தொடா்பாக நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி ரொக்கம் இது வரையில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகம் அவா்கள் கூறினா்.

    மேலும் பல கோடி மதிப்புள்ள நகை,ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp