
கோப்புப்படம்
தமிழகத்தில் சனிக்கிழமை 11 இடங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டியது.
அதிகபட்சமாக வேலூா், திருச்சிராப்பள்ளியில் 108 பாரன்ஹீட் டிகிரி பதிவானது.
திருத்தணியில் 107 டிகிரி, மதுரை விமானநிலையம், கரூா் பரமத்தியில் 106 டிகிரி, சேலத்தில் 105 டிகிரி, தருமபுரியில் 104 டிகிரி, கடலூரில் 101 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், சென்னை மீனம்பாக்கம், நாகப்பட்டினத்தில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.