காரைக்காலில் தீப்பற்றி எரியும் தனியார் பள்ளி மாணவர் பேருந்து
காரைக்காலில் தீப்பற்றி எரியும் தனியார் பள்ளி மாணவர் பேருந்து

காரைக்காலில் நிறுத்திவைக்கப்படிருந்த தனியார் பள்ளி 2 பேருந்து தீயில் கருகியது

 காரைக்காலில் நிறுத்திவைக்கப்படிருந்த  தனியார் பள்ளி 2 மாணவர் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தீயியில் கருகியது.

காரைக்கால்:  காரைக்காலில் நிறுத்திவைக்கப்படிருந்த  தனியார் பள்ளி 2 மாணவர் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை தீயியில் கருகியது.

புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்காக ரூ.1 கட்டணத்தில் பேருந்துகள் இயக்கி வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்தின்போது பள்ளிகள் மூடப்பட்டதால் தனியாரால் நிர்வகிக்கப்படும் இப்பேருந்துகளுக்கு வாய்ப்பில்லாமல், ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தது.

பள்ளிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டபோது, இப்பேருந்துகளை இயக்க பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை வைத்தபோதும் இதற்கான அனுமதி கிடைக்காததால் பேருந்துகள் வேறு பயன்பாடின்றி நிறுத்தப்பட்டிருக்கிறது.

காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் ஒரு திடலில்  3 மாணவர் பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை 12 மணியளவில் ஒரு பேருந்தின் உள்புறத்தில் தீப்பிடித்தது.  இதுகுறித்து அந்த பகுதியினர் காரைக்கால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே மற்றொரு பேருந்திலும் தீ பரவியது.

தீயணைப்பு நிலையத்திலிருந்து 2 வாகனங்கள் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் 2 பேருந்தின் உள்புற இருக்கைகள் முழுவதும் கருகியது. மற்றொரு பேருந்தில் தீ பரவாமல் பாதுகாக்கப்பட்டது.

இதுகுறித்து புகாரின்பேரில், மர்ம நபர்கள் யாரேனும் பேருந்துக்கு தீ வைத்தனரா அல்லது வேறு காரணமா என காரைக்கால் போலீஸார் விசாரணை செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com