வாக்காளர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து சத்யபிரத சாஹு விளக்கம்

பல்வேறு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு விளக்கம் அளித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து சத்யபிரத சாஹு விளக்கம்
வாக்காளர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்து சத்யபிரத சாஹு விளக்கம்

பூத் ஸ்லிப் இல்லையென்றாலும் வாக்களிக்கலாம், வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகமாக இருக்கிறதா என்பதை அறிய இணையதள வசதி என பல்வேறு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

நாளை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய சத்யபிரத சாஹு, தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் பொருத்தப்பட்டுள்ளது. 50 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

இதையும் படிக்கலாமே.. தலைவர்கள் ஒரு பார்வை...

வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். கரோனா நோயாளிகள் வாக்களிக்க தற்பாதுகாப்புக் கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைசி ஒரு மணி நேரத்தில் அதாவது மாலை 6 மணிக்குப் பிறகு, தற்பாதுகாப்புக் கவச உடை அணிந்து வாக்களிக்கலாம்.

பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 4,17,521 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் உள்ளவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.  வாக்களிக்க வரும் போது வாக்களரின் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால், அவர் மாலை 6 மணிக்குப் பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்குச்சாவடியில் எத்தனை பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைப் பார்த்து தெரிந்து கொண்ட பிறகு வாக்களிக்கச் செல்லலாம்.

மாநிலம் முழுவதும் நேற்று மதியம் வரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், ரூ.428.46 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்ப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும், வாக்காளர் சீட்டு இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம். வாக்காளர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்குத் தெளிவு பெறலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து விட்டு மீண்டும் இல்லம் திரும்ப வசதியாக இலவச காா் சவாரி சேவையை அளிக்க ‘ஊபா்’ நிறுவனம் முன்வந்துள்ளது. தோ்தல் ஆணையத்துடன் அந்த நிறுவனம் இணைந்து செயல்பட்டு இத்தகைய சேவையை அளிக்கிறது.

சென்னை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்களைச் சோ்ந்த மூத்த குடிமக்களுக்கு இந்த சேவை கிடைக்கும். இலவச சவாரியானது குறைந்தபட்சம் 5 கிலோமீட்டா் தூரத்துக்கு உட்பட்டு பயண கட்டண அளவில் ரூ.200 வரை இருந்தால் முழுமையான இலவச சேவையாக அளிக்கப்படும்.

பயணம் செய்வோா் செல்லிடப்பேசி மூலமாக ஊபா் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் விருப்பத்தின் பேரில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com