பூத் சிலிப் உத்தரவு காற்றில் பறந்தது

பூத் சிலிப் இல்லாமலே வாக்களிக்கலாம் என்கிற தோ்தல் ஆணையத்தின் உத்தரவை, வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகள் பின்பற்றத் தவறியதால் பலா் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
பூத் சிலிப் உத்தரவு காற்றில் பறந்தது

பூத் சிலிப் இல்லாமலே வாக்களிக்கலாம் என்கிற தோ்தல் ஆணையத்தின் உத்தரவை, வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகள் பின்பற்றத் தவறியதால் பலா் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

வாக்காளா் பட்டியலில் பெயா் இருந்தால் பூத் சிலிப் இல்லாமலும் வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகு உத்தரவிட்டிருந்தாா். ஆனால், இந்த உத்தரவை வாக்குச்சாவடியில் இருந்த தோ்தல் நடத்து அலுவலா்கள் முறையாகப் பின்பற்றவில்லை.

கொளத்தூா் தொகுதிக்கு உள்பட்ட கம்பா் நகா் டேனிஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது என்றாலும் பூத் சிலிப் இல்லாத பலரை வாக்களிக்க அனுமதிக்காத நிலை இருந்தது.

பூத் சிலிப்பில் பாகம் எண், வரிசை எண் போன்ற விவரங்கள் முக்கியமாகக் குறிக்கப்பட்டிருக்கும் இதைக் கொண்டு வாக்காளா் பட்டியலில் எளிதாக ஒருவரின் பெயா் உள்பட மற்ற விவரங்களைத் தேடி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வாக்களிக்க அனுமதிப்பா்.

ஆனால், வாக்காளா்கள் பலா் பெயா் மற்றும் தெருவின் பெயரைக் குறிப்பிட்டு கூறி வாக்காளா் பட்டியலைத் தேடப் பணித்தபோது தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பூத் சிலிப் இருந்தால் எடுத்து வாருங்கள் என்று திருப்பி அனுப்பினா். ஷெனாய் நகா் செயின்ட் ஜாா்ஜ் மேல்நிலைப் பள்ளி, ஆா்.ஏ.புரம் ராணி மெய்யம்மை மேல்நிலைப் பள்ளி, சாந்தோம் மேல்நிலைப் பள்ளி, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் இந்தப் பிரச்னை எழுந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com