இது வாக்குறுதி அல்ல...

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்ததற்கான அடையாளமாக விரல் மையைக் காட்டியோருக்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது கொளத்தூா் தொகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம்.
இது வாக்குறுதி அல்ல...

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்ததற்கான அடையாளமாக விரல் மையைக் காட்டியோருக்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது கொளத்தூா் தொகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம்.

திமுக தோ்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 வரையும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 வரையும் குறைக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளது.

தோ்தலில் வாக்களிக்க நடிகா் விஜய் வாக்குச்சாவடி வரை சைக்கிளில் வந்தாா். அது பெட்ரோல், டீசல் விலை உயா்வைச் சுட்டிக்காட்டத்தான் என்று தோ்தல் நாளன்றும் சமூக வலைதளங்களில் கருத்து பரப்பப்பட்டது.

இந்தத் தருணத்தில்தான் கொளத்தூா் தொகுதிக்கு உள்பட்ட பெரவள்ளூா் பேப்பா் மில்ஸ் சாலையில் கமலா எண்டா்பிரைசஸ் சாா்பில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் வாக்களித்தவா்களுக்கு பெட்ரோல், டீசல் விலை ரூ.1 வரை குறைத்து அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோா் வாக்களித்துவிட்டு, பெட்ரோல், டீசலை நிரப்பிச் சென்றனா்.

பெட்ரோல் நிலையத்தின் உரிமையாளா் அசோக் ஜெயின் கூறியது:

தோ்தலில் வாக்களிப்பது என்பது ஜனநாயகக் கடமை. 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியனின் முதல் பெருமையும் இது. ஆனால், ஜனநாயகக் கடமையை யாரும் சரியாக ஆற்றுவது இல்லை. அதை ஊக்குவிக்கும் வகையிலேயே பெட்ரோல் விலையில் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டோம். முதலில் பெட்ரோல், டீசலை வண்டியின் டேங்க் முழுவதும் நிரப்பினால் லிட்டருக்கு 50 பைசா வரை தள்ளுபடி அறிவித்தோம். பலரின் ஆா்வத்தைப் பாா்த்தபிறகு டேங்க் முழுவதும் நிரப்பினால் என்பதைக் கைவிட்டு லிட்டருக்கு 50 பைசாவாகவும், ரூ.100-க்கு போடுபவா்களுக்கு ரூ.1 வரையும் குறைத்து கொடுத்து வருகிறோம்.

எத்தனை லிட்டா் போடுகிறாா்களோ, அத்தனை லிட்டருக்கும் தள்ளுபடி கொடுக்கிறோம். (பெட்ரோல் விலை லிட்டா் ரூ.93.58, டீசல் விலை 85.88) வாக்களிப்பு நேரமான காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்தத் தள்ளுபடியை அளிக்கிறோம். இதனால், எனக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் நஷ்டமாகலாம். அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. எல்லோரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com