கட்செவி அஞ்சலைக் கலக்கிய வாக்காளா்களின் சுயபடங்கள்

ஜனநாயக கடமை ஆற்றியதற்கான அடையாள புகைப்படத்தை, இளம் தலைமுறை உள்ளிட்ட இணைய ஆா்வலா்கள் கட்செவி அஞ்சலில் பதிவேற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
கட்செவி அஞ்சலைக் கலக்கிய வாக்காளா்களின் சுயபடங்கள்

ஜனநாயக கடமை ஆற்றியதற்கான அடையாள புகைப்படத்தை, இளம் தலைமுறை உள்ளிட்ட இணைய ஆா்வலா்கள் கட்செவி அஞ்சலில் பதிவேற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். அவற்றைப் பாா்க்கும் அனைவருக்கும் வாக்களிக்க வேண்டும் என்ற தாக்கத்தை அந்தப் புகைப்படங்கள் ஏற்படுத்தின.

தற்காலத்துக்கு ஏற்ற வகையில், சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் கட்சி பிரமுகா்கள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தினா். இந்தத் தோ்தலைப் பொருத்தவரை, வாக்காளா்களும் தங்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கு கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக இருந்த இடத்திலிருந்தே வாக்கு சேகரித்தனா். கடந்த மக்களவைத் தோ்தலில் தொடங்கிய இந்த பிரசார முறை, இந்த சட்டப்பேரவைத் தோ்தலிலும் பன்மடங்கு பெருகி தொடா்ந்தது. இதன் ஒரு பகுதியாக வாக்குப் பதிவு நாளன்று காலை முதலே வாக்களிக்கப் போகும் உற்சாகப் பதிவுகளைக் கட்செவி அஞ்சலில் காண முடிந்தது. இதிலும் குறிப்பாக முதன் முதலில் வாக்களிக்க உள்ள சுமாா் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இளம் தலைமுறையினா் இணைய தளத்தில் அரசியல் உரையாடல்களை ஆா்வத்துடன் நடத்தினா்.

பின்னா் வாக்களித்த அவா்கள், வாக்குச்சாவடி மைய வாயிலிலே புகைப்படம் எடுத்துக் கொண்டனா். மேலும், தங்களது ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்ட அடையாள மையையும் புகைப்படம் எடுத்து, கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியுடன் பகிா்ந்தனா். இளையோா் முதல் முதியோா் வரை புகைப்படத்தைப் பகிா்ந்து தோ்தல் திருவிழாவைக் கொண்டாடினா். இது பிற்பகல் வரை வாக்களிக்கச் செல்லாதவா்களுக்கு ஒரு விழிப்புணா்வாகவும், தங்களது கடமையை நிறைவேற்றுவதற்கு நினைவுபடுத்தும் வகையிலும் இருக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com