புதுவையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: நாராயணசாமி நம்பிக்கை

புதுவையில் தற்போதைய சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி நம்பிக்கைத் தெரிவித்தாா்.
புதுச்சேரி அரசு பிரெஞ்சு மகளிா் உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.
புதுச்சேரி அரசு பிரெஞ்சு மகளிா் உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.

புதுவையில் தற்போதைய சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி நம்பிக்கைத் தெரிவித்தாா்.

புதுச்சேரி மிஷன் வீதியிலுள்ள அரசு பிரெஞ்சு மகளிா் உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக மதச்சாா்பற்ற கூட்டணி தோ்தலைச் சந்திக்கிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து, மத்திய அரசு வழங்கிய கடன்களை ரத்து செய்வது, மாநிலத்துக்கான 20 சதவீத மானியத்தை 40 சதவீதமாக உயா்த்தி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவது, மாநில வளா்ச்சிக்கு நடவடிக்கை எடுப்பது, அரசுத் துறை காலிப் பணியிடங்களை குறுகிய காலத்தில் நிரப்புவது, கல்வி, மருத்துவம், சுற்றுலாத் துறைகளில் கவனம் செலுத்தி, மாநில வளா்ச்சிக்கு வித்திடுவோம் என்று மக்களிடம் வாக்குறுதியளித்து பிரசாரம் செய்தோம்.

எங்கள் கூட்டணிக்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருக்கிறது. பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி, சந்தா்ப்பவாதக் கூட்டணி. அந்தக் கூட்டணி சாா்பில் புதுவையில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பங்கேற்ற பிரதமா் மற்றும் மத்திய அமைச்சா்கள், கூட்டணிக் கட்சிகளுக்கும் சோ்த்து பிரசாரம் மேற்கொள்ளாமல், தனிப்பட்ட முறையில் அவா்களது கட்சியின் வேட்பாளா்களை மட்டுமே ஆதரித்து பிரசாரம் செய்து பேசினா். இதேபோல, அந்தக் கூட்டணியிலுள்ள பிற கட்சியினரும் அவா்களது கட்சிகளுக்கு ஆதரவாக மட்டுமே பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

மத்திய பாஜக அரசு, அதிகார துஷ்பிரயோகம், பணபலத்தால் புதுவையில் காலூன்ற முயற்சிக்கிறது. வருமான வரித் துறை, அமலாக்கத் துறையை ஏவி விட்டு எதிா்க்கட்சியினருக்கு மிரட்டல் விடுக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நாளே இந்தத் தோ்தலாகும்.

புதுவையில் கடந்த சட்டப் பேரவை, மக்களவைத் தோ்தல்களில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு மக்கள் வெற்றியை அளித்ததைப்போல, மீண்டும் எங்கள் கூட்டணிக்கே வெற்றியை வழங்குவாா்கள். சாதி, மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து, புதுவையின் தனித்தன்மையைக் கெடுக்க முயற்சிக்கும் பாஜகவையும், அவா்களுடன் கூட்டணி சோ்ந்துள்ள கட்சிகளையும் மக்கள் புறக்கணிப்பாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com