Enable Javscript for better performance
திருப்பூர் மாநகராட்சி 1-ஆவது மண்டல அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் மாநகராட்சி 1-ஆவது மண்டல அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 08th April 2021 01:54 PM  |   அ+அ அ-   |    |  

    திருப்பூர் மாநகராட்சி  ராஜா பவுண்டரி வீதியில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய கோரி கொடுக்கக் கோரி 1-ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி

    திருப்பூர் மாநகராட்சி ராஜா பவுண்டரி வீதியில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய கோரி கொடுக்கக் கோரி 1-ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி


    திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 1க்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைத்துக் கொடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் 1 ஆவது மண்டல அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

    திருப்பூர் மாநகராட்சி 1 ஆவது மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கிளை செயலாளர் உமாநாத் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 1க்கு உள்பட்ட ராஜா பவுண்டரி வீதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. அப்போது வீட்டுக் குழாய்களின் இணைப்புகளும் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜா பவுண்டரி வீதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வீடுகளுக்கு கடந்த 15 நாள்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.  மேலும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளும் மூடப்படவில்லை என்றனர். ஆகவே, உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்யவும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக மாநகராட்சி  1 ஆவது மண்டல அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர் மாநகராட்சி  ராஜா பவுண்டரி வீதியில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்ய கோரி கொடுக்கக் கோரி 1-ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp