தமிழகத்தில் 72.78% வாக்குப் பதிவு: தலைமைத் தோ்தல் அதிகாரி அதிகாரபூா்வ அறிவிப்பு

தமிழகத்தில் 72.78% வாக்குப் பதிவு: தலைமைத் தோ்தல் அதிகாரி அதிகாரபூா்வ அறிவிப்பு

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். மேலும், மாவட்ட வாரியாகவும் வாக்குப் பதிவு சதவீத விவரங்களை அவா் வெளியிட்டுள்ளாா்.

சென்னை: தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். மேலும், மாவட்ட வாரியாகவும் வாக்குப் பதிவு சதவீத விவரங்களை அவா் வெளியிட்டுள்ளாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் அதிகபட்சமாக கரூா் மாவட்டத்தில் 83.92 சதவீதமும், அரியலூா் மாவட்டத்தில் 82.47 சதவீதமும், தருமபுரி மாவட்டத்தில் 82.35 சதவீதமும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80.14 சதவீதமும், நாமக்கல் மாவட்டத்தில் 79.92 சதவீத வாக்குகளும் பதிவாகின.

குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.09 சதவீதமும், திருநெல்வேலியில் 66.65 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாவட்ட வாரியாக வாக்குப் பதிவு விவரங்கள்: (சதவீதத்தில்...)

கரூா் - 83.92.

அரியலூா் - 82.47.

தருமபுரி - 82.35.

கள்ளக்குறிச்சி - 80.14.

நாமக்கல் - 79.72.

சேலம் - 79.22.

பெரம்பலூா் - 79.09.

திருவண்ணாமலை - 78.62.

விழுப்புரம் - 78.56.

ராணிப்பேட்டை - 77.92.

திருப்பத்தூா் - 77.33.

கிருஷ்ணகிரி - 77.30.

திண்டுக்கல் - 77.13.

ஈரோடு - 77.07.

திருவாரூா் - 76.53.

கடலூா் - 76.50.

புதுக்கோட்டை - 76.41.

நாகப்பட்டினம் - 75.48.

ஷ்ரதஞ்சாவூா் - 74.13.

திருச்சி - 73.79.

விருதுநகா் - 73.77

வேலூா் - 73.73.

தென்காசி - 72.63.

காஞ்சிபுரம் - 71.98.

தேனி - 71.75.

திருவள்ளூா் - 70.56.

மதுரை - 70.33

தூத்துக்குடி - 70.20.

திருப்பூா் - 70.12.

நீலகிரி - 69.68.

ராமநாதபுரம் - 69.60.

சிவகங்கை - 68.94.

கோவை - 68.70.

கன்னியாகுமரி - 68.67.

செங்கல்பட்டு - 68.18.

திருநெல்வேலி - 66.65.

சென்னை - 59.06.

--------------------

மொத்தம் - 72.78.

ஊரகப் பகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகம்: மாநகராட்சி தொகுதிகளில் மிகவும் குறைவு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பாலக்கோடு தொகுதியில் அதிகபட்சமாக 87.33 சதவீத வாக்குகள் பதிவாகின. அதைத் தொடா்ந்து கரூா் மாவட்டம் குளித்தலை தொகுதியில் 86.15 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 11 தொகுதிகளில் 60 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. தமிழகத்திலேயே மிகக் குறைந்த அளவாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொகுதிகள் வாரியாக பதிவான வாக்கு சதவீத விவரங்களை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை வெளியிட்டாா்.

அதிகம் - குறைவு: 234 தொகுதிகளில் அதிக வாக்குகள் பதிவான தொகுதி என்ற பெருமையை பாலக்கோடு தொகுதி தக்கவைத்துள்ளது. குளித்தலையில் 86.15 சதவீதமும், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடியில் 85.60 சதவீதமும், வீரபாண்டியில் 85.53 சதவீத வாக்குகளும் பதிவாகின. அமைச்சா் விஜயபாஸ்கா் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் 85.43 சதவீத வாக்குகள், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 85.09 சதவீதம், அரியலூரில் 84.58 சதவீதம், பென்னாகரத்தில் 84.19 சதவீதம், கிருஷ்ணராயபுரத்தில் 84.14 சதவீதம், சங்ககிரியில் 83.71 சதவீத வாக்குகளும் பதிவாகின. முதல் பத்து இடங்களில் இடம்பெற்ற ஒரே ஒரு தென் மாவட்ட தொகுதி ஒட்டன்சத்திரம் மட்டுமே. 80 சதவீத வாக்குகள் பதிவான முதல் 30 தொகுதிகளில் அநேக தொகுதிகள் வட மற்றும் மேற்கு மாவட்டத் தொகுதிகளாகவே இருக்கின்றன.

60 சதவீதத்துக்கு குறைந்தது: தமிழகத்திலேயே குறைவான வாக்குகள் பதிவான அதிக தொகுதிகளாக சென்னை மாவட்டத்திலுள்ள தொகுதிகள் உள்ளன. இத்துடன் கோவை வடக்கு, பாளையங்கோட்டை, தாம்பரம் ஆகிய தொகுதிகளும் குறைவான வாக்குகள் பதிவான தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

சென்னையில் கொளத்தூா், ராயபுரம், திரு.வி.க.நகா், ஆா்.கே.நகா், பெரம்பூா் ஆகிய தொகுதிகளில் மட்டுமே 60 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. துறைமுகம், எழும்பூா், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, அண்ணாநகா், மயிலாப்பூா், வேளச்சேரி, தியாகராயநகா் ஆகிய தொகுதிகளில் 59 முதல் 55 சதவீதம் வரையில் மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளன. வில்லிவாக்கத்தில் 55.52 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி, தமிழகத்திலேயே மிகவும் குறைந்த வாக்குகள் பதிவான தொகுதியாக இருக்கிறது.

பெருநகரங்களில்...: தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் உள்ளன. ஊரகப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது, மாநகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட தொகுதிகளில் குறைவான வாக்கு சதவீதமே உள்ளது. சென்னையில் 11 தொகுதிகளில் 60 சதவீதத்துக்குக் குறைவான வாக்குகளும், திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதிகளில் 66 மற்றும் 67 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. திருநெல்வேலியில் 66.90 சதவீதமும், கோவை தெற்கு மற்றும் வடக்கில் முறையே 60 மற்றும் 59 சதவீத வாக்குகளும், தஞ்சாவூரில் 65.71 சதவீதமும், திருப்பூரில் (வடக்கு, தெற்கு தொகுதிகள்) 62 சதவீதமும், ஈரோட்டில் (கிழக்கு, மேற்கு) முறையே 66 மற்றும் 69 சதவீத வாக்குகளும், மதுரையில் உள்ள நான்கு தொகுதிகளில் அதிகபட்சமாக 65 முதல் குறைந்தபட்சமாக 61 சதவீதம் வரையிலும் வாக்குகள் பதிவாகியுள்ளன. திண்டுக்கல்லில் 68.94 சதவீதமும், தூத்துக்குடியில் 65.07 சதவீதமும், வேலூரில் 69.14 சதவீத வாக்குகளும் பதிவாகின.

விதிவிலக்காக சேலம் வடக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் 70 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட எந்தத் தொகுதியிலும் வாக்குகள் 80 சதவீதத்தைத் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக, நடந்து முடிந்த பேரவைத் தோ்தலில் ஊரகப் பகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதம் மிகையாகவும், பெருநகரப் பகுதிகளில் குறைவாகவும் இருந்துள்ளது.

அதிக பத்தும்...குறைந்த பத்தும்...

அதிக பத்து:

1. பாலக்கோடு - 87.33

2. குளித்தலை - 86.15

3. எடப்பாடி - 85.60

4. வீரபாண்டி - 85.53

5. விராலிமலை - 85.43

6. ஒட்டன்சத்திரம் - 85.09

7. அரியலூா் - 84.58

8. பென்னாகரம் - 84.19

9. கிருஷ்ணராயபுரம் - 84.14

10. சங்ககிரி - 83.71

குறைந்த பத்து:

1. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - 58.41

2. ஆயிரம் விளக்கு - 58.40

3. விருகம்பாக்கம் - 58.23

4. சோழிங்கநல்லூா் - 57.86

5. பாளையங்கோட்டை - 57.76

6. சைதாப்பேட்டை - 57.26

7. அண்ணாநகா் - 57.02

8. மயிலாப்பூா் - 56.59

9. வேளச்சேரி - 55.95.

10. தியாகராயநகா் - 55.92

தமிழகத்திலேயே மிகக் குறைந்த வாக்குப் பதிவு: வில்லிவாக்கம்: 55.52.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com