ஏப்ரல் 10 முதல் இவற்றுக்கெல்லாம் முற்றிலும் தடை

தமிழகத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கோயம்பேடு சில்லறை விற்பனைக் கடைகளுக்கும்,  திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10 முதல் இவற்றுக்கெல்லாம் முற்றிலும் தடை
ஏப்ரல் 10 முதல் இவற்றுக்கெல்லாம் முற்றிலும் தடை

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் கோயம்பேடு சில்லறை விற்பனைக் கடைகளுக்கும்,  திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில்,

கரோனா பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

1. எனவே மறு உத்தரவு வரும் வரை கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

 மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத்தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

நோய் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு வரும் 10-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

ஏப்ரல் 10 முதல், கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

அதேப்போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லறை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com