'கரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு முற்றிலும் தவிர்க்க வேண்டும்'

கரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
'கரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு முற்றிலும் தவிர்க்க வேண்டும்'

கரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் கரோனா தடுப்பூசி ஏப்ரல் 6 நிலவரப்படி 8.7 கோடி பேருக்கு போடப்பட்டிருக்கிறது. இதை வைத்து பார்க்கிற போது 1 லட்சம் பேருக்கு சராசரியாக 6,310 பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால், உலகளவில் தடுப்பூசி போட்டவர்கள் சராசரியாக 1 லட்சம் பேருக்கு 8,900 ஆக இருக்கிறது. 
மற்ற நாடுகளை ஒப்பிடுகிற போது 1 லட்சம் பேருக்கு அமெரிக்காவில் 50,410, பிரிட்டனில் 54,680 ஆகவும் இருக்கிறது. இந்நிலையில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலமே கரோனா தொற்றுப் பரவலை தடுக்க முடியும். மத்திய அரசு இதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போட வேண்டுமே தவிர, தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
மத்திய அரசு இதுவரை 6 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாத நிலையில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு மக்கள் விரோத நடவடிக்கையாகும். இதனை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com