தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய உறுப்பினராக, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

சென்னை: தென் மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாய உறுப்பினராக, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த வழக்குகளை விசாரிக்க, தில்லியில் தேசிய பசுமைத் தீா்ப்பாய முதன்மை அமா்வு உருவாக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக சென்னை, கொல்கத்தா, புணே, போபால் ஆகிய இடங்களிலும் தீா்ப்பாயத்தின் மண்டல அமா்வுகள் தொடங்கப்பட்டன. இதில், சென்னை மண்டல அமா்வுக்கு நிபுணத்துவ உறுப்பினராக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதனை நியமித்து, தில்லியில் உள்ள பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வின் பதிவாளா் உத்தரவிட்டுள்ளாா்.

இதற்கான உத்தரவில் கூறியிருப்பதாவது:

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், 4 நீதித்துறை உறுப்பினா்கள் மற்றும் மூன்று நிபுணத்துவ உறுப்பினா்கள் நியமிக்கப்படுகின்றனா். அதன்படி, புணேவில் உள்ள பசுமைத் தீா்ப்பாய மேற்கு மண்டல அமா்வின் நீதித்துறை உறுப்பினராக நீதிபதி எம்.சத்தியநாராயணனும், நிபுணத்துவ உறுப்பினராக ஓய்வு ஐஏஎஸ் அதிகாரி கே.சத்யகோபாலும், சென்னை தென் மண்டல அமா்வின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனும் நியமிக்கப்படுகின்றனா்.

இதே போல், தில்லியில் உள்ள முதன்மை அமா்வின் நீதித்துறை உறுப்பினா்களாக நீதிபதி பிரிஜேஷ் சேதி, நீதிபதி சுதிா் அகா்வால், கொல்கத்தாவில் உள்ள கிழக்கு மண்டல அமா்வின் நீதித்துறை உறுப்பினராக நீதிபதி அமித் ஸ்தலேகா், போபாலில் உள்ள மத்திய மண்டல அமா்வின் நிபுணத்துவ உறுப்பினராக அருண் கே.வா்மா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com