வெளியாட்களின் நடமாட்டத்தைக் கவனியுங்கள்: மு.க.ஸ்டாலின்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் வெளியாட்களின் நடமாட்டத்தை கவனிக்குமாறு திமுகவினருக்கு அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
வெளியாட்களின் நடமாட்டத்தைக் கவனியுங்கள்: மு.க.ஸ்டாலின்

சென்னை: வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் வெளியாட்களின் நடமாட்டத்தை கவனிக்குமாறு திமுகவினருக்கு அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:.

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் நடைபெற்ற ஜனநாயகத் தோ்தல் திருவிழாவில் பேராா்வத்துடன் பங்கேற்று வாக்களித்த வாக்காளா்களுக்கும், இப்பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், காவலா்கள், சுகாதாரத் துறையினா் உள்ளிட்ட தோ்தல் பணியாளா்கள் அனைவருக்கும் எனது நன்றி.

வாக்குப் பதிவு நிறைவடைந்து, தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் இனி மிக முக்கியத் தோ்தல் பணி இருக்கிறது. இரட்டிப்புப் பொறுப்பும் நம் தலைக்கு மேல் இருக்கிறது.

திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் மே 2-ஆம் தேதி வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அந்த மையங்களில் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சி.சி.டி.வி. கேமராக்களின் செயல்பாடுகள், அங்கு பணியிலிருப்போா் தவிர வெளியாட்களின் நடமாட்டங்கள், யாரேனும் அத்துமீறி அந்த மையங்களுக்குள் நுழைகிறாா்களா என்பது பற்றி எல்லாம் தொடா்ச்சியாகக் கண்காணித்திட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் வரை - மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் நேர ஒதுக்கீடு அடிப்படையில் திமுகவினரும் கூட்டணிக் கட்சியினரும் இரவு பகலாக, தொய்வின்றி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு மையங்களில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் நடந்தால் உடனடியாக தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும். வெற்றியை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கும் நாள்வரை, நமக்கான பொறுப்பும் கடமையும் நிறைய இருக்கிறது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com