சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

கோவில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரம்: இந்து சமய அறநிலைய துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சேலத்தில் கோவில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில், கோவில் சொத்துக்களை பாதுகாக்க  இந்து சமய அறநிலைய துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத


சென்னை: சேலத்தில் கோவில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில், கோவில் சொத்துக்களை பாதுகாக்க  இந்து சமய அறநிலைய துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பெருமாள் கோவில் அழிக்கப்பட்டு, சிலைகள் திருடப்பட்டுள்ளன. கோவிலுக்குச் சொந்தமாக ரூ.50 கோடி  மதிப்பிலான நிலம் உள்ளது.  அந்த நிலம் வருவாய் துறை அதிகாரிகளின் உடந்தையுடன், தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.எனவே இந்த கோவிலையும், அதன் சொத்துக்களையும் மீட்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது
இந்து சமய அறநிலைய துறை தரப்பில் கோவிலுக்கு தகுதியான நபரை நியமிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளது. அதன்பின் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவே அதற்காக கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோயிலில் நியமிக்கப்படவுள்ள தகுதியான நபர் பற்றிய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். 

கோவில் நிலங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள், கோயில் சொத்துக்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டனர்.

கோவில் நிலத்தின் தற்போதைய உரிமையாளரை கண்டுபிடித்து அறிக்கை அளிக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோயில் நிலம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு,  விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com