தூத்துக்குடியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

வஉசி சந்தையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்தவித கட்டடங்களையும் கட்டக் கூடாது என வலியுறுத்தியும் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீரென காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

தூத்துக்குடி வஉசி சந்தையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்தவித கட்டடங்களையும் கட்டக் கூடாது என வலியுறுத்தியும் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீரென காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி வஉசி சந்தையில் உள்ள கடைகளை ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறி மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் நோட்டீஸ் ஒட்டியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வஉசி சந்தையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்தவித கட்டடங்களையும் கட்டக் கூடாது என வலியுறுத்தியும் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீரென காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வஉசி சந்தையில் தாங்கள் நான்கு தலைமுறையாக வியாபாரம் செய்து வரும் நிலையில், தங்களை காலி செய்ய கூறுவதால் ஏறத்தாழ 50 ஆயிரம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கைவிட்டு பழையை நிலையே தொடர வேண்டும்.

அப்படி இல்லை என்றால் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com