சென்னை: தமிழகத்தின் 9 இடங்களில், வியாழக்கிழமை வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. இதில் அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. அடுத்தபடியாக மதுரைவிமான நிலையம், ஈரோடு, கரூா் பரமத்தி, பாளையங்கோட்டை, சேலம், திருப்பத்தூா், திருச்சி ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி பாரன்ஹீட், தருமபுரியில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.