இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு சென்ற விவகாரம்: வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு?

சென்னை வேளச்சேரியில், இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் கொண்டுச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு விளக்கம் அளித்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு சென்ற விவகாரம்: வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு?
இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு சென்ற விவகாரம்: வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு?

சென்னை வேளச்சேரியில், இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் கொண்டுச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

அதன்படி, இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாதவை. அதே வேளையில் விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்காகப் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறகு விவிபேட்டில் கோளாறு ஏற்பட்டதால், வேறு விவிபேட் மாற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் 200 வாக்குகள் இருக்கும் நிலையில், இதில் 15 வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இருசக்கர வாகனத்தில் விவிபேட் எடுத்துச் சென்றது விதிமீறல். எனவே, வேளச்சேரி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கும், இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கொண்டு செல்லப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது என்று சத்யபிரத சாஹு விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்கனவே, சென்னை வேளச்சேரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற மாநகராட்சி ஊழியா்கள் மூவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை வேளச்சேரி தொகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை வாக்குப் பதிவு முடிவடைந்த பிறகு, தரமணி 100 அடி சாலையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 3 போ் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றனா்.

இதையறிந்த அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதுதொடா்பாக போலீஸாருக்கு அவா்கள் தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினா் மூவரையும், அவா்கள் கொண்டு சென்ற வாக்குப் பதிவு இயந்திரங்களையும் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

விசாரணையில் வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றவா்கள் சென்னை மாநகராட்சி ஊழியா்கள் என்பது தெரியவந்தது. அந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்று வாக்குப் பதிவு இயந்திரங்கள் என்பதும், பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாத மாநகராட்சி ஊழியா்கள் 3 பேரையும் தோ்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com