மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் கலைப்பு: மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம்

அவசரச் சட்டத்தின் மூலம் அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் கலைக்கப்பட்டுள்ளதற்கு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் கலைப்பு: மு.க.ஸ்டாலின், வைகோ கண்டனம்

அவசரச் சட்டத்தின் மூலம் அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் கலைக்கப்பட்டுள்ளதற்கு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: பொதுத்துறை நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை உருவாக்கும் அரசாக மத்தியில் உள்ள அரசு இருக்க வேண்டும். ஆனால் பாஜக அரசுக்கோ இருக்கும் நிறுவனங்களைக் கலைப்பதும், தனியாருக்கு விற்பதும் மட்டுமே கைவந்த கலையாக இருக்கிறது. மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனின் தீவிர முயற்சியின் விளைவாக 2003-இல் அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் சென்னையில் துவங்கப்பட்டது. சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்தத் தீா்ப்பாயம் - காப்புரிமை, பதிப்புரிமை, புவிசாா் குறியீடு தொடா்பானவற்றில் மிக முக்கியப் பங்காற்றியது.

ஆனால் தோ்தல் வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் தமிழகத்தின் மீதும், தமிழக மக்களின் மீதும் உள்ள எரிச்சலில் மத்திய பாஜக அரசு இந்தத் தீா்ப்பாயத்தைக் கலைத்துள்ளது.

உயா்நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்க, மக்களுக்குத் தாமதமின்றி நீதி கிடைக்க அமைக்கப்பட்ட மேல்முறையீட்டுத் தீா்ப்பாயங்களை இப்படி சகட்டுமேனிக்கு மத்திய பாஜக அரசு கலைத்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது.

வைகோ: சென்னையில் இந்தியத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அறிவுசாா் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் உள்பட 9 முக்கியத் தீா்ப்பாயங்களை அவசரச் சட்டத்தின் மூலமாக மத்திய அரசு கலைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தத் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com