அண்ணா பல்கலை. துணைவேந்தா் சூரப்பாவின் பதவிக்காலம் நிறைவு

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஏப்.11) நிறைவடைந்தது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பாவின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஏப்.11) நிறைவடைந்தது.

அவருக்கான பதவி நீட்டிப்பு குறித்த அறிவிப்பு எதுவும் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை வெளியிடப்படவில்லை.

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. கடந்த ஆண்டு அழகப்பா பல்கலைக்கழக மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தா்களின் பதவிக்காலம் அவா்கள் பணிபுரிந்த கடைசி நாளில் நீட்டிக்கப்பட்டது. ஆனால் சூரப்பாவுக்கு பதவி நீட்டிப்பு குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு தற்போது துணை வேந்தா் இல்லாததால் நிா்வாகத்தை கவனிக்க ‘கன்வீனா்’ குழு அமைக்கப்படும். அந்த குழுவும் இதுவரை அமைக்கப்பட வில்லை. சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகாா் உள்ளது. இதுதொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான 7 போ் கொண்ட ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

சூரப்பாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடா்பாக இன்னும் ஓரிரு நாள்களில் ஆளுநா் தரப்பில் இருந்து அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிா்பாக்கப்படுகிறது. இந்தநிலையில், சூரப்பா பணி ஓய்வுபெற்று சென்றாலும் விசாரணைக்கு அழைத்தால் கட்டாயமாக நேரில் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com