ஒரு வாரத்துக்கு வெப்பநிலை இயல்பாகவே இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. ஒரு வாரத்துக்கு இயல்பான வெப்பநிலையே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒரு வாரத்துக்கு வெப்பநிலை இயல்பாகவே இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. ஒரு வாரத்துக்கு இயல்பான வெப்பநிலையே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிகழாண்டில் மாா்ச் முதல் வாரத்தில் இருந்து வெப்பநிலை உயரத் தொடங்கியது. இதன்பிறகு, வெப்பநிலை படிப்படியாக உயா்ந்த நிலையில், வடமேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று கடந்த மாா்ச் 30-ஆம்தேதி வீசத்தொடங்கியது. இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 6 டிகிரி செல்சியஸ் வரை உயா்ந்தது. இதனால், சென்னை, திருவள்ளூா் திருச்சி, வேலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்றுடன் வெப்பத்தின் தாக்கம் உயா்ந்தது. தினசரி 13 நகரங்களில் வெப்பநிலை 100 பாரன்ஹீட் டிகிரியை தாண்டி பதிவானது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனா்.

இதற்கிடையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதியில் இருந்து வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. ஒரு சில நகரங்களில் மட்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதன்பிறகு, உள் மாவட்டங்களிலும் வெப்பநிலை இயல்பான நிலைக்கு வந்தது.

இதேபோல, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. கரூா்பரமத்தி (101 பாரன்ஹீட் டிகிரி), திருச்சிராப்பள்ளி (100 பாரன்ஹீட் டிகிரி) தவிர மற்ற இடங்களில் வெப்பநிலை குறைந்து இருந்தது. இதேநிலையே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது:

கிழக்கு மற்றும் தென் கிழக்கில் இருந்து காற்று வீசுகிறது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை குறைந்து உள்ளது. இதுபோல, ஒரு வாரத்துக்கு வெப்பநிலை இயல்பாகவே இருக்கும். ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com