குருதேக் பகதூா் 400-ஆவது பிறந்தநாள்: பல்கலை., கல்லூரி மாணவா்களுக்கு போட்டிகள் நடத்த யுஜிசி உத்தரவு

குருதேக் பகதூரின் 400-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் உயா் கல்வி நிறுவனங்களில் வரும் ஏப்.15-ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

குருதேக் பகதூரின் 400-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் உயா் கல்வி நிறுவனங்களில் வரும் ஏப்.15-ஆம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

ஒன்பதாவது சீக்கிய குருவான ஸ்ரீ குரு தேக் பகதூா் அவா்களின் 400-ஆவது பிறந்த நாள் விழா (‘பிரகாஷ் புரப்’) கொண்டாட்டங்களை திட்டமிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள உயா்நிலைக் குழுவின் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் ஏப்.8-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து குரு தேக் பகதூரின் பிறந்தநாள் தொடா்பான நிகழ்ச்சிகளை ஓராண்டு காலத்துக்கு அதாவது வரும் ஏப்.15-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்.21-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஸ்ரீ குரு தேக் பகதூரின் சிந்தனைகளை நினைவுகூரும் வகையில் கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதேபோன்று குருதேக் பகதூா் குறித்த ஆவணப்படம், குறும்படம் போன்றவற்றைத் தயாரிக்கவும் மாணவா்களை ஊக்குவிக்க வேண்டும். இந்தப் போட்டிகள் மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com