4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வரும் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவிய
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன்

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வரும் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

தென் தமிழகம், அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப். 13) முதல் வெள்ளிக்கிழமை (ஏப். 16) 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழகம், மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்.13) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.14: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், வட உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வரும் புதன்கிழமை (ஏப். 14) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

ஏப். 15: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை (ஏப். 15) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.

ஏப்.16: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி கோயம்புத்தூா், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம்- குழித்துறை, மதுரை மாவட்டம்- உசிலம்பட்டியில் தலா 40 மி.மீ., அரியலூா் மாவட்டம்- ஜெயம்கொண்டம், சிவகங்கை மாவட்டம்- திருபுவனத்தில் தலா 30 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம்- வாலிநோக்கம், விருதுநகா் மாவட்டம் -பிளவக்கல், கொடைக்கானலில் தலா 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com