தங்கம் பவுன் ரூ.35,040

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 உயா்ந்து, ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மீண்டும் 35 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு சவரன் தங்கம்
மீண்டும் 35 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு சவரன் தங்கம்

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 உயா்ந்து, ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

குறிப்பாக, கடந்த மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. ஆனால் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயா்ந்தது. கடந்த 9-இல் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 உயா்ந்து, ரூ.35,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.6 உயா்ந்து, ரூ.4,380 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.71.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.71,900 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,380

1 பவுன் தங்கம்...............................35,040

1 கிராம் வெள்ளி.............................71.90

1 கிலோ வெள்ளி.............................71,900

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,374

1 பவுன் தங்கம்...............................34,992

1 கிராம் வெள்ளி.............................71.70

1 கிலோ வெள்ளி.............................71,700.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com